TMB Bank

கண்ணோட்டம்

கல்வி நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட TMB ஆன்லைன் ஃபீஸ் பேமெண்ட் மாட்யூல் - மாணவர்களிடம் கல்விக் கட்டணங்களை எளிதாக வசூல் செய்ய உதவுகிறது. எந்த வங்கியின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மற்றும் UPI உள்பட பல பேமெண்ட் வழிகளை ஆதரிக்கும் இந்த ஒருங்கிணைந்த அமைப்பு, கல்வி கட்டண வசூல் செயல்முறையை எளிமையாக்குகிறது.


TMB Bank

சிறப்பம்சங்கள்    

  • எளிதான வழிசேர்தல்
  • தனி மென்பொருள் எதுவும் தேவையில்லை.
  • நூலக கட்டணம், விடுதி கட்டணம், கட்டட நிதி என பல வகை கட்டணங்களை தனித்தனியே அமைக்கலாம். ஒவ்வொருக்குமான கட்டணத்திற்கும் தனி வங்கி அக்கவுண்ட் தொடங்கிய பிறகு கட்டண வசூல் வசதி இயக்கப்படும்.
  • கல்வி நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க மறைமுக செலவு சேமிப்பு கிடைக்கும்.
  • நிறுவனங்கள் MIS அறிக்கைகளை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
  • குறைந்த செயலாக்க காலம் (TAT) - ஒரு வாரத்திற்குள் முடித்துவிடலாம்.
  • நாங்கள் இந்த விண்ணப்பம் மற்றும் கட்டண வசூல் சேவைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.

TMB Bank

பலன்கள்

  • உங்கள் நிறுவன இணையதளத்துடன் எளிதாக இணைக்கலாம்.
  • விண்ணப்பத்தின் அனைத்து பக்கங்களிலும் கட்டண ரசீதிலும் உங்கள் நிறுவனத்தின் லோகோ காட்சிப்படுத்தப்படும்.
  • கட்டண தொகை, செலுத்திய தேதி, தாமதக் கட்டணங்கள் போன்ற விவரங்களை நிறுவனம் எந்த நேரத்திலும் மாற்றிக்கொள்ளலாம்.

TMB Bank

கட்டணங்கள்

  • டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / பிற வங்கி நெட் பேங்கிங் மூலம் செலுத்தும்போது பொருந்தும் கட்டணங்கள் விதிக்கப்படும்.
  • TMB நெட் பேங்கிங் மற்றும் UPI வழியில் செலுத்தும்போது எந்த டிரான்ஷாக்சன் கட்டணமும் இல்லை.

TMB Bank

உங்கள் நிறுவனத்தை எப்படி பதிவு செய்வது?

TMB FeePay ஆன்லைன் ஃபீஸ் பேமெண்ட் தொடர்பான எந்தவொரு கேள்விக்கும் உதவ வங்கியின் தொழில்நுட்ப உதவி குழு எப்போதும் தயாராக இருக்கிறது.

TMB FeePay - ஆன்லைன் ஃபீஸ் பேமெண்ட் முறையை நன்கு புரிந்துகொள்ள நிறுவனங்களுக்கு நேரடி டெமோ காட்டப்படும்.

தொடர்பு கொள்வதற்கான விவரங்கள்

இமெயில் : tmb_digital[at]tmbank[dot]in , adc_devp[at]tmbank[dot]in