தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS)

NPS திட்டம் கட்டமைக்கப்பட்ட பங்களிப்புகள், நெகிழ்வான முதலீட்டு விருப்பங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட கணக்கு நிர்வாகத்தின் மூலம் தனிநபர்கள் ஒழுக்கமான ஓய்வூதிய நிதியை உருவாக்க உதவுகிறது

feature-img

அரசால் ஒழுங்குபடுத்தப்படும் தன்னார்வ ஓய்வூதிய திட்டம்

feature-img

டயர் I மற்றும் டயர் II கணக்கு விருப்பங்கள்

feature-img

நெகிழ்வான பங்களிப்பு அமைப்பு

feature-img

நீண்டகால ஓய்வூதிய திட்டமிடலை ஆதரிக்க வடிவமைக்கப்பட்டது

summarize
கண்ணோட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) என்பது இந்திய அரசால் 2004 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் முதலீட்டு திட்டமாகும்.
மேலும் படிக்க

 
தயாரிப்பு சிறப்பம்சங்கள்

NPS இரண்டு வகையான கணக்குகளை வழங்குகிறது — டயர் I மற்றும் டயர் II. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்களது நிதி இலக்குகளுக்கு ஏற்ப ஓய்வூதிய சேமிப்புகளை நிர்வகிக்க முடியும். வருடத்தில் எந்த நேரத்திலும் பங்களிப்புகளைச் செய்யலாம் மற்றும் அதிகபட்ச வரம்பு இல்லாததால் ஊதியதாரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கிறது.

cmp-img
 
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

NPS காலமுறை அல்லது விருப்ப பங்களிப்புகள் மூலம் ஓய்வூதிய சேமிப்புக்கான கட்டமைக்கப்பட்ட வழியை வழங்குகிறது. திட்ட விதிகளின்படி சந்தாதாரர்கள் பல்வேறு ஓய்வூதிய நிதி நிர்வாகிகள் மற்றும் சொத்து வகைகளைத் தேர்வு செய்யலாம். நிர்ணயிக்கப்பட்ட வயதை அடைந்த பின் சேமிக்கப்பட்ட தொகையின் ஒரு பகுதியை கட்டங்களாகப் பெறலாம்.

cmp-img
 
தகுதி

KYC விதிமுறைகளை பின்பற்றும் 18 முதல் 70 வயதுடைய இந்திய குடிமக்கள் NPS திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மூலம் பதிவு செயல்முறையை முடித்து விருப்பமான கணக்கு வகையைத் தேர்ந்தெடுத்து திட்டத்தில் சேரலாம்.

நோக்கங்கள்

இந்தியாவின் அனைத்து குடிமக்களும் ஓய்வுக்கு பிறகு நிதிப் பாதுகாப்புடன் வாழ, எளிதில் கிடைக்கக்கூடிய ஓய்வூதிய சலுகைகளும் நீண்டகால சேமிப்பு வழிகளும் உறுதிசெய்யப்படுகின்றன.

inv-icon1

ஓய்வூதியமற்ற சமூகத்தை ஓய்வூதிய சமூகமாக மாற்றுவதே எங்கள் இலக்கு.

inv-icon1

நீண்டகால பங்களிப்புகளுக்கு சரியான வருமானம் வழங்குவது.

inv-icon1

ஓய்வூதியத்தின் மூலம் ஓய்வுக்கு பிறகு கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கு வழி வகை செய்வது.

inv-icon1

இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் முதுமைக்கால பாதுகாப்பு கவரேஜை விரிவுபடுத்துவது.

NPS எப்படி செயல்படுகிறது?

ஒரு தனிநபர், அங்கீகரிக்கப்பட்ட வழிகள் (வங்கி) மூலம் NPS அக்கவுண்டில் சந்தா செலுத்தி, தொடர்ந்து பங்களிப்புகளை செய்ய வேண்டும்.

செலுத்தப்பட்ட பங்களிப்புத் தொகை ஒரு ஓய்வூதிய நிதியில் திரட்டப்படும்.

இந்த நிதிகள், PFRDA-ஆல் கட்டுப்படுத்தப்படும் தொழில்முறை ஃபண்ட் மேனேஜர்களால், அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு வழிகாட்டுதல்களின்படி, ஈக்விட்டி, அரசு பத்திரங்கள், பில்கள், கார்ப்பரேட் கடனீட்டுச் சான்றுகள் போன்ற பல்வகைப்பட்ட போர்ட்ஃபோலியோக்களில் முதலீடு செய்யப்படும்.

பல ஆண்டுகளாக இந்தப் பங்களிப்புகள் வளர்ந்து திரளும்; செய்யப்பட்ட முதலீட்டிற்கேற்ப வருமானம் கிடைக்கும்.

NPS-ல் இருந்து இயல்பாக வெளியேறும் போது, திரட்டப்பட்ட ஓய்வூதிய சொத்தை, PFRDA பட்டியலில் உள்ள லைஃப் இன்ஷுரன்ஸ் நிறுவனத்திடம் ஆண்யுடி (வாழ்நாள் ஓய்வூதியம்) வாங்குவதற்கு பயன்படுத்தலாம் அல்லது ஒரு பகுதியை மொத்தமாக (லம்ப்-சம்) எடுக்கலாம்.

தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க் லிமிடெட்., PFRDA-ஆல் NPS-க்கான பாய்ண்ட் ஆஃப் ப்ரெஷன்ச் (POP) ஆக நியமிக்கப்பட்டுள்ளது. தற்போது எங்கள் அனைத்து கிளைகளும் பாய்ண்ட் ஆஃப் ப்ரெசன்ஸ் சர்வீஸ் ப்ரொவைடர்களாக (POP-SP) NPS சேவைகளை வழங்க நியமிக்கப்பட்டுள்ளன.

NPS வரி சலுகை

2015 யூனியன் பட்ஜெட்டில் FY 2015-16-க்கு செய்யப்பட்ட வரி திருத்தங்களின்படி, NPS திட்டத்தின் டியர் I-ல் தன்னார்வமாக பங்களிப்பு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பிரிவு 80CCE-ன் கீழ் ₹1,50,000 உச்சவரம்புக்கு மேலும் கூடுதலாக பிரிவு 80CCD (1B)-ன் கீழ் ₹50,000 வரை கூடுதல் வரி சலுகை கிடைக்கும்.

₹2,00,000/- வரை வரி சலுகைக்கு தகுதியுள்ள சந்தாதாரர் NPS-ல் மட்டும் முதலீடு செய்ய விரும்பினால், பிரிவு 80CCD (IB)-ன் கீழ் ₹50,000/- மற்றும் 80CCE-ன் கீழ் ₹1,50,000/- என முழு வரி சலுகையும் பெறலாம்.

முதலீட்டு சுதந்திரம்

NPS, உங்கள் முதலீட்டை சிறப்பாக திட்டமிட பல்வகையான முதலீட்டு விருப்பங்களையும் ஓய்வூதிய நிதி மேலாளர் (PFM)-ஐ தேர்வு செய்யும் சுதந்திரத்தையும் வழங்குகிறது. சில ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, ஒரு முதலீட்டு விருப்பத்திலிருந்து மற்றொன்றுக்கோ அல்லது ஒரு ஃபண்ட் மேனேஜரிடமிருந்து மற்றொருவரிடமோ மாற்றிக் கொள்ளலாம். வருமானம் முழுவதும் சந்தை அடிப்படையிலானது; கீழ்க்கண்ட ஃபண்ட் மேனேஜர்களில் யாரையும் தேர்வு செய்யலாம்:

  • LIC பென்ஷன் ஃபண்ட் லிமிடெட்
  • SBI பென்ஷன் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
  • UTI ரிட்டையர்மென்ட் சொல்யூஷன்ஸ் லிமிடெட்
  • ICICI புருடென்ஷியல் பென்ஷன் ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்
  • Kotak Mahindra பென்ஷன் ஃபண்ட் லிமிடெட்
  • HDFC பென்ஷன் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்
  • Aditya Birla Sun Life பென்ஷன் மேனேஜ்மென்ட் லிமிடெட்
  • TATA பென்ஷன் மேனேஜ்மென்ட் லிமிடெட்
  • Axis பென்ஷன் ஃபண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட்
  • DSP பென்ஷன் ஃபண்ட் மேனேஜர் பிரைவேட் லிமிடெட்

முதலீட்டு விருப்பங்கள்

NPS, சந்தாதாரரின் முதலீட்டிற்காக கீழ்க்கண்ட இரண்டு விருப்பங்களை வழங்குகிறது. பங்களிப்பை எவ்வாறு பகிர்வது என்று சந்தாதாரர் ஒரு விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

1. ஆக்டிவ் சாய்ஸ்:

சந்தாதாரர் தங்கள் பங்களிப்பு எவ்வாறு முதலீடு செய்யப்பட வேண்டும் என்று நேரடியாக தேர்வு செய்யலாம். ஆக்டிவ் சாய்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால், கார்ப்பரேட், அரசு மற்றும் ஈக்விட்டி ஆகியவற்றுக்கு இடையேயான சதவீத பகிர்வை குறிப்பிட வேண்டும். டியர் I-ல் ஈக்விட்டி முதலீட்டிற்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்சம் 75%; டியர் II-ல் 100%, 51 வயதிலிருந்து குறைவு இல்லாமல்.

2. ஆட்டோ சாய்ஸ்:

நிதி அறிவு இல்லாத அல்லது முதலீட்டு விருப்பத்தை தேர்வு செய்ய இயலாத / விரும்பாத சந்தாதாரர்களுக்கு, பங்களிப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்ட போர்ட்ஃபோலியோவின்படி முதலீடு செய்யப்படும்.

NPS அக்கவுண்ட் வகைகள்

இந்தத் திட்டம் இரண்டு டியர்களாக அமைக்கப்பட்டுள்ளது:

டியர் I அக்கவுண்ட்:

சந்தாதாரரின் விருப்பத்திற்கேற்ப திரட்டப்படும் தொகை முதலீடு செய்யப்படும் நிரந்தர ஓய்வூதிய அக்கவுண்டாகும். திரும்பப் பெறும் வசதி இல்லாதது.

டியர் II அக்கவுண்ட்:

  • தன்னார்வ சேமிப்பு வசதி.
  • டியர் I-க்கு PRAN ஒதுக்கீட்டிற்கு பிறகே டியர் II அக்கவுண்ட் தொடங்க முடியும்.
  • டியர் II அக்கவுண்டில் சந்தாதாரர் தங்கள் விருப்பப்படி பணம் செலுத்தவும் திரும்பப் பெறவும் சுதந்திரம் இருக்கும்.

NPS தொடங்க தேவையான KYC ஆவணங்கள்

  • நிரந்தர முகவரி சான்று (பதிவுப் படிவத்தில் குறிப்பிட்டவற்றில் ஏதேனும் ஒன்று)
  • தொடர்பு முகவரி சான்று (பதிவுப் படிவத்தில் குறிப்பிட்டவற்றில் ஏதேனும் ஒன்று)
  • ரத்து செய்யப்பட்ட செக் அல்லது கிளை வழங்கிய வங்கி சான்றிதழ்.
  • PAN கார்டு நகல்.

Details of minimum contribution and charges -

பங்களிப்பு மற்றும் கட்டணங்கள்

வகை arrow_downwardகட்டணங்கள் arrow_downward
விவரம்NPS பொதுத் திட்டங்களுக்கான (அனைத்து குடிமக்கள் மற்றும் கார்ப்பரேட் மாடல்) கட்டணங்கள் — NPS வாத்சல்யா உட்பட
சந்தாதாரர் ஆன்போர்டிங்கின் முதல் ஆண்டுAUM-ன் 0.2% ஆண்டுக்கு (குறைந்தபட்சம் ₹30/-க்கு உட்பட்டு) காலாண்டு அடிப்படையில் சமவீதமாக.
இரண்டாம் ஆண்டு முதல் (அடுத்தடுத்த பங்களிப்புகள்)AUM-ன் 0.2% ஆண்டுக்கு (குறைந்தபட்சம் ₹30/-க்கு உட்பட்டு) காலாண்டு அடிப்படையில் சமவீதமாக.

குறிப்புகள் :

  • 1. AUM (மேலாண்மையின் கீழ் இருக்கும் சொத்துக்கள்) என்பது NPS-ன் கீழ் நிர்வகிக்கப்படும் நிதிகளின் மொத்த மதிப்பை குறிக்கும். இதில் சந்தாதாரர்களின் பங்களிப்புகள் மற்றும் அதனோடு சேர்ந்த வளர்ச்சியும் அடங்கும். இம்மதிப்பு, குறிப்பிட்ட தேதியில் பொருந்தும் நிகர சொத்து மதிப்பு (NAV)-இன் அடிப்படையில் கணக்கிடப்படும்.
  • 2. கட்டணங்கள் பிடிக்கப்படும் முறை: மத்திய பதிவக பராமரிப்பு முகமையால் யூனிட்களை ரத்து செய்வதன் மூலம் பிடிக்கப்படும்.
  • 3. GST அல்லது பொருந்தும் பிற வரிகள் தனியாக வசூலிக்கப்படும்.
  • 4. இந்த சுற்றறிக்கையில் 'p.a.' என்பது தொடர்ந்த நான்கு (04) காலாண்டுகள் கொண்ட காலகட்டத்தை குறிக்கும். இதனை நிதி ஆண்டு அல்லது நாட்காட்டி ஆண்டுடன் தொடர்புபடுத்தி பொருள் கொள்ளக் கூடாது.
  • 5. அதன்படி, காலாண்டின் கடைசி நாளில் AUM-ன் 0.05% அளவில் கட்டணம் வசூலிக்கப்படும்.
  • 6. செயலற்ற அக்கவுண்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. ஒரு காலாண்டில் பங்களிப்பு செய்யப்பட்ட பிறகு, தொடர்ந்து நான்கு காலாண்டுகளுக்கு எந்தவொரு பங்களிப்பும் இல்லாத அக்கவுண்டு, ஒவ்வொரு காலாண்டின் இறுதியில் செயலற்ற அக்கவுண்டாக வகைப்படுத்தப்படும்.

பங்களிப்பு மற்றும் கட்டணங்கள்

வகை arrow_downwardடியர் 1 arrow_downwardடியர் 2 arrow_downward
அக்கவுண்ட் தொடங்க குறைந்தபட்ச பங்களிப்புஇல்லை₹1,000/-
நிதி ஆண்டில் குறைந்தபட்ச பங்களிப்பு₹1,000/-பொருந்தாது (N.A)
ஒவ்வொரு பங்களிப்பிலும் குறைந்தபட்ச தொகை₹500/-₹250/-
AMC Protean (ஆண்டுக்கு)₹69/-இல்லை
ஃபண்ட் மேனேஜ்மென்ட் கட்டணம் (ஆண்டுக்கு)AUM-ன் 0.09%AUM-ன் 0.09%

பங்களிப்பு விவரங்கள்

  • மத்திய பதிவு வைக்கும் முகமை (CRA)-ஆல் விண்ணப்பம் செயல்படுத்தப்பட்டவுடன், சந்தாதாரருக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) ஒதுக்கீடு செய்யப்படும். PRAN கிடைத்த பிறகு, சந்தாதாரர் ஆன்லைனில் (https://cra-nsdl.com/CRA/ என்ற இணையதளத்தில் உள்நுழைந்து) அல்லது கிளை மூலம் பங்களிப்பு செய்யலாம்.

டியர் II ஆக்டிவேஷன் விவரங்கள்:-

  • டியர் I அக்கவுண்ட் வைத்திருக்கும் சந்தாதாரர், டியர் II அக்கவுண்டை ஆன்லைனில் (https://cra-nsdl.com/CRA/ என்ற இணையதளத்தில் உள்நுழைந்து) அல்லது கிளை மூலம் ஆக்டிவேட் செய்யலாம்.

NPS விவரங்களில் மாற்றம் செய்தல்:-

  • பெயர், தந்தையின் பெயர், நாமினேஷன், ஓய்வூதிய ஃபண்ட் மேலாளர் (PFM) போன்ற விவரங்களை மாற்ற விரும்பும் சந்தாதாரர், தங்கள் கிளையை தொடர்பு கொண்டு மாற்றம் செய்யும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • மொபைல் எண், இமெயில் ID, PRAN மறுவழங்கல், I-Pin/T-Pin கோரிக்கை போன்ற விவரங்களை மாற்ற விரும்பும் வாடிக்கையாளர், ஆன்லைனில் (https://cra-nsdl.com/CRA/ என்ற இணையதளத்தில் உள்நுழைந்து) அல்லது கிளையில் மாற்றம் செய்யும் விண்ணப்பம் சமர்ப்பித்து மாற்றிக் கொள்ளலாம்.

NPS-ல் திரும்பப் பெறுதல் வகைகள்

அ. இயல்பான திரும்பப் பெறுதல் (ஓய்வு வெளியேற்றம்) A. Normal withdrawal (Superannuation Exit)

  • சந்தாதாரர் 60 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
  • மொத்தத் தொகை ₹5 லட்சம் வரை இருந்தால் முழுவதும் மொத்தமாக வழங்கப்படும்.
  • தொகை ₹5 லட்சத்திற்கு மேல் இருந்தால், குறைந்தது 40% ஆண்யுடி வாங்குவதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்; மீதமுள்ள 60% மொத்தமாக வழங்கப்படும்.

ஆ. முன்கூட்டிய வெளியேற்றம்:

  • குறைந்தது 5 ஆண்டுகள் சந்தாதாராக இருந்திருக்க வேண்டும்.
  • வெளியேறும் நேரத்தில் தொகை ₹2.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் முழுவதும் மொத்தமாக வழங்கப்படும்.
  • தொகை ₹2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், குறைந்தது 80% ஆண்யுடி வாங்குவதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்; மீதமுள்ள 20% மொத்தமாக வழங்கப்படும்.

இ. மரணத்தினால் வெளியேற்றம்:

  • சந்தாதாரின் முழு ஓய்வூதிய சொத்தும் நாமினி அல்லது சட்டப்படியான வாரிசுக்கு வழங்கப்படும். நாமினி/சட்டப்படியான வாரிசு ஆண்யுடி (ஓய்வூதியம்) விரும்பினால், இறப்பு திரும்பப் பெறுதல் படிவத்தில் (Death Withdrawal Form) ஆன்யுட்டி சர்வீஸ் ப்ரொவைடர் (ASP) மற்றும் ஆண்யுடி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் (PFRDA வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு).

ஈ. நிபந்தனை திரும்பப் பெறுதல்:

  • சந்தா காலம் முழுவதும் சந்தாதாரர் தங்கள் சொந்த பங்களிப்புகளில் 25% வரை மூன்று தடவை திரும்பப் பெறலாம்.
  • NPS-ல் 3 ஆண்டுகள் முடிந்த பிறகே முதல் நிபந்தனை திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படும்; அடுத்தடுத்த திரும்பப் பெறுதல், முந்தைய திரும்பப் பெறுதலிலிருந்து 5 ஆண்டுகள் கடந்த பிறகு அனுமதிக்கப்படும்.

60 வயதுக்கு மேல் NPS-ல் சேரும் சந்தாதாரர்களுக்கான நிபந்தனைகள் / 60+ சந்தாதாரர்களுக்கான நிபந்தனைகள்

  • இவர்கள் 75 வயது வரை NPS அக்கவுண்டை தொடரலாம் அல்லது ஒத்திவைக்கலாம்.
  • முன்பு NPS அக்கவுண்டை மூடிய சந்தாதாரர்களும், புதுப்பிக்கப்பட்ட வயது தகுதி விதிகளின்படி புதிய NPS அக்கவுண்ட் தொடங்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
  • 3 ஆண்டுகள் முடிந்த பிறகு வெளியேறுவது இயல்பான வெளியேற்றமாக கருதப்படும் (புள்ளி - அ-ல் குறிப்பிட்ட விதிகளின்படி).
  • 3 ஆண்டுகள் முடிவதற்கு முன்பு வெளியேறுவது முன்கூட்டிய வெளியேற்றமாக கருதப்படும் (புள்ளி - ஆ-ல் குறிப்பிட்ட விதிகளின்படி).
  • சந்தாதாரின் துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், முழு திரட்சியும் நாமினிக்கு மொத்தமாக வழங்கப்படும். நாமினி/சட்டப்படியான வாரிசு ஆண்யுடி (ஓய்வூதியம்) விரும்பினால், இறப்பு திரும்பப் பெறுதல் படிவத்தில் (Death Withdrawal Form)ஆண்யுட்டி சர்வீஸ் ப்ரொவைடர் (ASP) மற்றும் ஆண்யுடி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் (PFRDA வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு).

ஆவணங்கள் & பதிவிறக்கம்

அனைத்து வகையான தேவையான படிவங்களையும் ஒரே இடத்தில் கண்டறிந்து பதிவிறக்கம் செய்யுங்கள்

APY Forms

வரிசை எண்கோப்பின் பெயர்கோப்பு வகைசெயல்பாடு
1தனியார் துறை அனைத்து குடிமக்கள் / கார்ப்பரேட்டிற்கான அக்கவுண்ட் தொடங்கும் படிவம்.

 PDF

பார்க்கவும்
2சிறுவர்களுக்கான அக்கவுண்ட் தொடங்கும் படிவம்

 PDF

பார்க்கவும்
3NRI / OCI-க்கான அக்கவுண்ட் தொடங்கும் படிவம்

 PDF

பார்க்கவும்
4சிறுவர் NRI / OCI-க்கான அக்கவுண்ட் தொடங்கும் படிவம்

 PDF

பார்க்கவும்
5இடை-துறை மாற்றப் படிவம் (ISS – ver. 1.7).

 PDF

பார்க்கவும்
6திட்ட விருப்ப மாற்றப் படிவம் (Annexure S3 ver.1.6).

 PDF

பார்க்கவும்
7டியர் II ஆக்டிவேஷன் படிவம் (Annexure S10 ver.1.6).

 PDF

பார்க்கவும்
8NRI-க்கான கூடுதல் நாமினேஷன் படிவம் (NSRF - ver.1.8)-இணைப்பு_II

 PDF

பார்க்கவும்
9இயல்பான திரும்பப் பெறுதல் / வெளியேற்றப் படிவம் 301

 PDF

பார்க்கவும்
10மரண கிளைம் திரும்பப் பெறுதல் படிவம் 303

 PDF

பார்க்கவும்
11FATCA சுய அறிவிப்பு படிவம்

 PDF

பார்க்கவும்
12PIN மாற்றம் மற்றும் மறுவழங்கல் படிவம்

 PDF

பார்க்கவும்
13கிளை மாற்றப் படிவம்

 PDF

பார்க்கவும்
14வங்கி மாற்றப் படிவம்

 PDF

பார்க்கவும்
15கையொப்பம் அல்லது புகைப்படம் மாற்றப் படிவம்

 PDF

பார்க்கவும்
16டியர் II திரும்பப் பெறுதல் படிவம்

 PDF

பார்க்கவும்
17டியர் II-லிருந்து டியர் I-க்கு ஒரே திசையில் மாற்றும் படிவம் (UOS S13)

 PDF

பார்க்கவும்
18கார்ப்பரேட் ஊழியர் - PIN மாற்றம் மற்றும் மறுவழங்கல் படிவம்

 PDF

பார்க்கவும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

NPS என்பது தனிநபர்கள் ஓய்வுகால சேமிப்பை வளர்க்க உதவும் அரசு ஒழுங்குபடுத்தும் ஓய்வூதிய திட்டம்.

NPS என்பது தனிநபர்கள் ஓய்வுகால சேமிப்பை வளர்க்க உதவும் அரசு ஒழுங்குபடுத்தும் ஓய்வூதிய திட்டம்.
ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப தகுதியான இந்திய குடிமக்கள் NPS-ல் சேரலாம்.

ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப தகுதியான இந்திய குடிமக்கள் NPS-ல் சேரலாம்.
சந்தாதாரர் தேர்வு மற்றும் விதிகளுக்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட அசெட் கிளாஸ்களில் பங்களிப்புகள் முதலீடு செய்யப்படும்.

சந்தாதாரர் தேர்வு மற்றும் விதிகளுக்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட அசெட் கிளாஸ்களில் பங்களிப்புகள் முதலீடு செய்யப்படும்.
திட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பகுதி வித்டிராயல் அனுமதிக்கப்படுகிறது.

திட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பகுதி வித்டிராயல் அனுமதிக்கப்படுகிறது.
NPS, பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி (PFRDA) ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

NPS, பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி (PFRDA) ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
NPS என்பது தனிநபர்கள் ஓய்வுகால சேமிப்பை வளர்க்க உதவும் அரசு ஒழுங்குபடுத்தும் ஓய்வூதிய திட்டம்.

NPS என்பது தனிநபர்கள் ஓய்வுகால சேமிப்பை வளர்க்க உதவும் அரசு ஒழுங்குபடுத்தும் ஓய்வூதிய திட்டம்.
ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப தகுதியான இந்திய குடிமக்கள் NPS-ல் சேரலாம்.

ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப தகுதியான இந்திய குடிமக்கள் NPS-ல் சேரலாம்.
சந்தாதாரர் தேர்வு மற்றும் விதிகளுக்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட அசெட் கிளாஸ்களில் பங்களிப்புகள் முதலீடு செய்யப்படும்.

சந்தாதாரர் தேர்வு மற்றும் விதிகளுக்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட அசெட் கிளாஸ்களில் பங்களிப்புகள் முதலீடு செய்யப்படும்.
திட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பகுதி வித்டிராயல் அனுமதிக்கப்படுகிறது.

திட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பகுதி வித்டிராயல் அனுமதிக்கப்படுகிறது.
NPS, பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி (PFRDA) ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

NPS, பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி (PFRDA) ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.