கண்ணோட்டம்
IRDAI விதிமுறைகள் 2015 இன்படி, வங்கிகளுக்கு காப்பீடு வணிகத்தில் நுழைய IRDAI அனுமதி வழங்கியுள்ளது. எங்கள் வங்கி CA0204 என்ற பதிவு சான்றிதழ் எண்ணுடன் கார்ப்பரேட் ஏஜென்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்கண்ட நான்-லைஃப் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எங்கள் வங்கி கார்ப்பரேட் ஏஜென்டாக செயல்படுகிறது.
- M/s. யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ் கம்பெனி லிமிடெட்
- M/s. சோழமண்டலம் MS ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்.
- M/s. ஜுரிச் கோட்டக் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட்.
மேற்கண்ட காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் நான்-லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசிகளை வாடிக்கையாளர்களிடம் சேர்க்கவும் விநியோகிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரீமியம்
- கிளைகள் பாலிசிதாரர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட பிரீமியத்தை வசூலித்து, காப்பீட்டு நிறுவனத்தின் அக்கவுண்டிற்கு அனுப்பும்.
- காப்பீட்டாளரிடமிருந்து வசூலிக்கப்பட்ட பிரீமியம் எங்களால் தக்கவைக்கப்படாது. அது உடனடியாக காப்பீட்டு நிறுவனத்தின் அக்கவுண்டிற்கு டிரான்ஷ்ஃபர் செய்யப்படும்.
- வணிகத்தை சேர்க்கும்போது, காப்பீட்டு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் பிரீமியம் விகிதங்களிலிருந்து வேறுபட்ட விகிதங்களை நாங்கள் ஒருபோதும் மாற்றி சொல்ல மாட்டோம்.
பாலிசிகள்
- பாலிசிகள் வழங்கும்படி காப்பீட்டு நிறுவனத்தை நாங்கள் தொடர்ந்து பின்தொடர்வோம்; வழங்கப்பட்ட பாலிசிகளை பாலிசிதாரர்களிடம் நேரடியாக ஒப்படைப்போம்.
- இமெயில் அல்லது நேரடி நகல் மூலம் பாலிசி கிடைத்தவுடன், அதை உடனடியாக சரிபார்க்குமாறு பாலிசிதாரர்களை வேண்டுகிறோம்.
- ஏதேனும் பிழைகள் அல்லது முரண்பாடுகள் இருந்தால் கண்டறிந்து, உடனடியாக காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு திருத்தம் செய்வோம்.
- காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிய பாலிசிகளில் எங்கள் வங்கி எந்த மாற்றமும், திருத்தமும் செய்யாது.
கிளைம்கள்
- கிளைம் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அதனை தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி, கிளைம் செயல்முறையை தொடங்குவோம்.
- கிளைம்கள் பாலிசியின் விதிமுறைகளுக்கு இணங்கவே தீர்வு செய்யப்படும்.
- கிளைம் நடைமுறைகள் குறித்து எங்கள் பாலிசிதாரர்களுக்கு நாங்கள் வழிகாட்டுவோம். இழப்பை உடனடியாக தெரிவிப்பது, கிளைம் படிவங்கள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிப்பது, அனைத்து முக்கிய தகவல்களையும் வெளிப்படையாக தெரிவிப்பது மற்றும் காப்பீட்டு நிறுவனம் அல்லது கணக்காய்வாளர்கள் கோரும் தேவைகளை நிறைவேற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.
- கிளைம் தீர்வுக்கு உதவி வழங்குவதற்காக பாலிசிதாரர்களிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கமாட்டோம்.
புகார் தீர்வு வழிமுறை
- தொலைபேசி, எழுத்து, இமெயில் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட வேறு தகவல் தொடர்பு வழிகளில் பாலிசிதாரர்களிடமிருந்து புகார்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
- பாலிசிதாரர்கள் தங்கள் புகார்களை கிளை தலைவரிடம் உள்ள ""புகார் பதிவேட்டில்"" பதிவு செய்யலாம் அல்லது கிளைகளில் உள்ள ""புகார் பெட்டியில்"" போடலாம்.
- புகார் ஒப்புகை ரசீது வழங்கிய 14 நாட்களுக்குள் பாலிசிதாரர்களின் புகார்களுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுப்போம்.
வழங்கப்படும் காப்பீட்டு திட்டங்கள்
மேற்கண்ட காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் கீழ்கண்ட காப்பீட்டு பாலிசிகளை நாங்கள் சேர்க்கிறோம் மற்றும் விநியோகிக்கிறோம்
1. யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ் கம்பெனி லிமிடெட் :
- * தீ மற்றும் சிறப்பு அபாய காப்பீட்டு பாலிசி (Standard Fire and Special Perils Policy)
- * மோட்டார் இன்ஷுரன்ஸ் பாலிசி
- * ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசி – UNI Family Medicare Policy
- * ட்ராவல் இன்ஷுரன்ஸ் பாலிசி
- * தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி (Personal Accident Insurance Policy)
- * வீட்டினர் காப்பீட்டு பாலிசி (Householders Insurance Policy)
- * கடை உரிமையாளர் காப்பீட்டு பாலிசி (Shopkeepers Insurance Policy)
- * சரக்கு கடல் காப்பீட்டு பாலிசி – Marine Hull, Marine Cargo
- * தொழில் காப்பீட்டு பாலிசி – அ. ஒப்பந்தக்காரர் இயந்திர காப்பீட்டு பாலிசி ஆ. தொழில்களுக்கான அனைத்து ரிஸ்க் காப்பீட்டு பாலிசி இ. இயந்திர கோளாறு காப்பீட்டு பாலிசி
- * பொறுப்பு காப்பீட்டு பாலிசி (Liability Insurance Policy)
- * பிற இன்ஷுரன்ஸ் பாலிசிகள்
2. M/s. சோழமண்டலம் MS ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் :
- தீ மற்றும் சிறப்பு அபாய காப்பீட்டு பாலிசி (Standard Fire and Special Perils Policy)
- மோட்டார் இன்ஷுரன்ஸ் பாலிசி
- ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசி – UNI Family Medicare Policy
- ட்ராவல் இன்ஷுரன்ஸ் பாலிசி
- தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி (Personal Accident Insurance Policy)
- வீட்டினர் காப்பீட்டு பாலிசி (Householders Insurance Policy)
- கடை உரிமையாளர் காப்பீட்டு பாலிசி (Shopkeepers Insurance Policy)
- சரக்கு கடல் காப்பீட்டு பாலிசி – Marine Hull, Marine Cargo
- தொழில் காப்பீட்டு பாலிசி – அ. ஒப்பந்தக்காரர் இயந்திர காப்பீட்டு பாலிசி ஆ. தொழில்களுக்கான அனைத்து ரிஸ்க் காப்பீட்டு பாலிசி இ. இயந்திர கோளாறு காப்பீட்டு பாலிசி
- பொறுப்பு காப்பீட்டு பாலிசி (Liability Insurance Policy)
- பிற இன்ஷுரன்ஸ் பாலிசிகள்
3. M/s. ஜுரிச் கோட்டக் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் :
- தீ மற்றும் சிறப்பு அபாய காப்பீட்டு பாலிசி (Standard Fire and Special Perils Policy)
- மோட்டார் இன்ஷுரன்ஸ் பாலிசி
- ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசி – UNI Family Medicare Policy
- ட்ராவல் இன்ஷுரன்ஸ் பாலிசி
- தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி (Personal Accident Insurance Policy)
- வீட்டினர் காப்பீட்டு பாலிசி (Householders Insurance Policy)
- கடை உரிமையாளர் காப்பீட்டு பாலிசி (Shopkeepers Insurance Policy)
- சரக்கு கடல் காப்பீட்டு பாலிசி – Marine Hull, Marine Cargo
- தொழில் காப்பீட்டு பாலிசி – அ. ஒப்பந்தக்காரர் இயந்திர காப்பீட்டு பாலிசி ஆ. தொழில்களுக்கான அனைத்து ரிஸ்க் காப்பீட்டு பாலிசி இ. இயந்திர கோளாறு காப்பீட்டு பாலிசி
- பொறுப்பு காப்பீட்டு பாலிசி (Liability Insurance Policy)
- பிற இன்ஷுரன்ஸ் பாலிசிகள்