மொபைல் வங்கி சேவை (TMB MBank)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் மொபைல் வங்கி சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்த எளிதான மொபைல் பயன்பாடுகள் மூலம் பாதுகாப்பான கணக்கு அணுகலை வழங்குகின்றன

feature-img

எளிமையான மற்றும் பாதுகாப்பான மொபைல் வங்கி அனுபவம்

feature-img

எப்போது வேண்டுமானாலும் பணப்பரிவர்த்தனை மற்றும் நிதி பரிமாற்ற அணுகல்

feature-img

இருப்பு, கணக்கு அறிக்கை மற்றும் பரிவர்த்தனைகளை உடனடியாக பார்க்கலாம்

feature-img

தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்டது

summarize
சுருக்கம்

TMB MBank மூலம் மொபைல் பேங்கிங் இனி இன்னும் எளிது! நிதி மற்றும் நிதி சாரா டிரான்ஷாக்சன்களை எங்கிருந்தும், எப்போதும் செய்யலாம். 
TMB MBank-ஐ பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.

...
தயாரிப்பு சிறப்பம்சங்கள்

கிளைக்கு செல்லாமல் வாடிக்கையாளர்கள் 24x7 அத்தியாவசிய வங்கி சேவைகளை மொபைல் மூலம் அணுகலாம். இந்த தளம் பணப்பரிவர்த்தனைகள், ரீசார்ஜ், மினி கணக்கு அறிக்கைகள், காசோலை புத்தக கோரிக்கைகள் மற்றும் கணக்கு நிர்வாக அம்சங்களை ஆதரிக்கிறது

cmp-img
...
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

மொபைல் வங்கி சேவை மூலம் வாடிக்கையாளர்கள் கணக்கு இருப்பை சரிபார்க்கலாம், NEFT அல்லது IMPS வழியாக நிதி பரிமாற்றம் செய்யலாம், மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்யலாம், பயன்பாட்டு கட்டணங்களை செலுத்தலாம் மற்றும் கணக்கு அறிக்கைகளை பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் அம்சங்களில் டெபிட் கார்டு மேலாண்மை, சேவை கோரிக்கைகள், பாதுகாப்பான உள்நுழைவு முறைகள் மற்றும் நேரடி பரிவர்த்தனை அறிவிப்புகள் அடங்கும்

cmp-img
...
தகுதி

தனிநபர்கள், HUF அக்கவுண்ட்களின் கர்த்தா, சொந்த தொழில் நடத்துபவர்கள் மற்றும் கூட்டு அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் (யாரேனும் ஒருவர் அல்லது உயிருடன் இருப்பவர்) இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள்.

மொபைல் பேங்கிங்கில் கிடைக்கும் சேவை விவரங்கள்

  • NEFT, RTGS மற்றும் IMPS மூலம் மற்ற வங்கிகளுக்கு பணம் அனுப்பலாம்.
  • சொந்த அக்கவுண்ட்களுக்கும் TMB-வங்கியுள்ளேயும் மொபைல் எண் அல்லது அக்கவுண்ட் எண் மூலம் டிரான்ஷாக்சன் செய்யலாம்.
  • அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது இமெயிலில் பெறலாம்.
  • மொபைலிலேயே பேலன்ஸ், டெபாசிட் மற்றும் கடன் அக்கவுண்ட் விவரங்கள் பார்க்கலாம்.
  • பயோமெட்ரிக் மூலம் எளிதாகவும் பாதுகாப்பாகவும் உள்நுழையலாம்.
  • சொவெர்ஜன் தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம்.
  • 18,000-க்கும் மேற்பட்ட யூட்டிலிட்டி பில்கள், மொபைல் ரீசார்ஜ் மற்றும் DTH ரீசார்ஜ் செலுத்தலாம்.
  • பேருந்து / விமான / ஹோட்டல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
  • டெபாசிட் தொடங்கலாம் மற்றும் முடிக்கலாம் (முன்கூட்டிய முடிவு உட்பட).
  • செக்புக் கோரிக்கை செய்யலாம்.
  • உள்வரும் / வெளியாகும் செக் கிளியரிங் விசாரணை மற்றும் பாசிட்டிவ் பே.
  • டெபிட் கார்டு நிர்வகிக்கலாம்.
  • கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.
  • ATM / கிளை / இ-லாபி இருப்பிட தேடல்.
  • உங்கள் கிளையில் லாக்கர் கிடைக்குமா என்று விசாரிக்கலாம்.
  • ECS / NACH மற்றும் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் விசாரணை.
  • பயனாளரை சேர்க்காமல் உடனடியாக பணம் அனுப்பலாம்.
  • போஸ்ட்பெய்ட் பில்கள் மற்றும் TNEB பில்கள் செலுத்தலாம்.
  • மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம்.

தகுதியான அக்கவுண்ட்கள்

  • சேவிங்ஸ் அக்கவுண்ட் - SB ஜனதா அக்கவுண்ட் தவிர.
  • கரன்ட் அக்கவுண்ட் (தனிநபர் / சொந்த தொழில்).
  • ஓவர்டிராஃப்ட் அக்கவுண்ட்கள் - தனிநபர் OD, டெர்ம் டெபாசிட் / அரசு பத்திரங்கள் / தங்கம் பிணையாக OD.

டிரான்ஷாக்சன் வரம்புகள் (நாளொன்றுக்கு)

  • TMB-க்குள் - ₹25,00,000/-
  • சொந்த அக்கவுண்ட் டிரான்ஷாக்சன்: ₹2,00,00,000/-
  • NEFT- ₹5,00,000/-
  • RTGS- ₹5,00,000/-
  • IMPS- ₹5,00,000/-
  • கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வரம்பு: ₹5000/-

TMB MBank-ல் பதிவு செய்வது எப்படி?

  • RBI வழிகாட்டுதல்களின்படி, TMB MBank ஆப்பில் device binding (சாதன இணைப்பு) செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • முதல் முறை பதிவு செய்ய 'SEND SMS' என்று கிளிக் செய்யவும்.
  • இரட்டை SIM தொலைபேசியில், வங்கியில் பதிவான மொபைல் எண்ணுக்கு உரிய SIM-ஐ தேர்வு செய்யும்படி ஆப் கேட்கும்.
  • பதிவு செய்யும்போது SMS-க்கான நிலையான கட்டணம் பொருந்தும்; ஒரு SMS அனுப்ப போதுமான பேலன்ஸ் இருப்பதை உறுதி செய்யவும்.
  • மொபைல் டேட்டா / இன்டர்நெட் இணைப்பு இயங்கும் நிலையில் இருக்கட்டும்.
  • பதிவு தோல்வியடாமல் இருக்க, Settings → SIM Management-ல் SIM முடக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும்.
  • சாதனத்தை மாற்ற விரும்பினால், பழைய மொபைலில் ஆப்பை நிறுவல் நீக்கி, புதிய மொபைலில் பதிவிறக்கம் செய்து மேலே கூறிய படிகளை மீண்டும் செய்யவும்.

விதிமுறைகள் & நிபந்தனைகள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக இருங்கள்

மோசடிகள் மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்:

செய்ய வேண்டியவை:

  • அங்கீகரிக்கப்பட்ட App Store / Play Store-ல் இருந்து பதிவிறக்கும் முன், ஆப்பின் பதிவிறக்க எண்ணிக்கை, பயனர் மதிப்பீடுகள், கருத்துகள் மற்றும் 'ADDITIONAL INFORMATION' பகுதியை கவனமாக சரிபார்க்கவும்.
  • Android சாதனங்களில் 'TMB MBank' ஆப் பதிவிறக்கும் முன், Google Play Store-ல் 'Offered by' என்பது 'Tamilnad Mercantile Bank' என்று இருப்பதை உறுதி செய்யவும்.
  • iOS சாதனங்களில் 'TMB MBank' ஆப் பதிவிறக்கும் முன், App Store-ல் 'Provider' என்பது 'Tamilnad Mercantile Bank' என்று இருப்பதை உறுதி செய்யவும்.
  • மொபைல் சாதனத்தில் அப்டேட் செய்யப்பட்ட antivirus நிறுவி பராமரிக்கவும்; சந்தேகமான சாதனங்களை ஸ்கேன் செய்து வைரஸ்களை அகற்றவும்.
  • Android அப்டேட்கள் மற்றும் பேட்ச்கள் கிடைக்கும்போது உடனே நிறுவிக்கொள்ளவும்.
  • ஆப்பின் நோக்கத்திற்கு பொருந்தாத permissions அதாவது அனுமதிகளை கொடுக்காதீர்கள்; தேவையான அனுமதிகளை மட்டுமே அனுமதிக்கவும்.
  • யாரும் யூகிக்க முடியாத சிக்கலான PIN தேர்வு செய்யவும்; உள்நுழைவு PIN மற்றும் டிரான்ஷாக்சன் PIN-ஐ அடிக்கடி மாற்றவும்.
  • அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட் அடிக்கடி சரிபார்த்து, அங்கீகரிக்கப்படாத டிரான்ஷாக்சன்கள் ஏதாவது இருக்கிறதா என்று கவனிக்கவும்.
  • மொபைல் தொலைந்தால் அல்லது திருட்டுப் போனால், உடனே உங்கள் சேவை வழங்குநரையும் சட்டப்படி அதிகாரிகளையும் தொடர்பு கொள்ளவும்.
  • மொபைல் எண் மாறினால் உடனே வங்கிக்கு தெரிவிக்கவும்; இல்லையென்றால் SMS தகவல்கள் வேறொருவருக்கு போகக்கூடும்.
  • பொது இடங்களில் ப்ளூடூத் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும்; உங்கள் தரவு திருடப்படக்கூடும்.
  • நம்பகத்தன்மையற்ற இணையதளங்களில் எதுவும் பதிவிறக்காதீர்கள்.
  • தெரியாத அல்லது தெரிந்த மூலங்களிலிருந்து வரும் இமெயில் இணைப்புகளை, காலர் டியூன் அல்லது டயலர் டியூன் சலுகைகளை ஏற்கும்போது மிகவும் கவனமாக இருக்கவும்.

செய்யக்கூடாதவை :

  • தெரியாத இணையதளங்கள் / சந்தேகமான செய்திகளில் வரும் லின்க்களிலிருந்து ஆப்களை பதிவிறக்காதீர்கள்; App Store / Play Store மூலம் மட்டுமே பதிவிறக்கவும்.
  • Jailbreak / Rooted சாதனங்களில் 'TMB MBank' நிறுவாதீர்கள்.
  • Android / iOS சாதனங்களில் ரிமோட் டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களை நிறுவாதீர்கள்; மோசடியாளர்கள் உங்கள் மொபைலை கட்டுப்படுத்தி நிதி இழப்பை உண்டாக்கக்கூடும்.
  • உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது எளிதான வடிவங்களை PIN-ஆக வைக்காதீர்கள்.
  • உங்கள் PIN அல்லது ரகசிய தகவல்களை யாரிடமும் - போனிலோ, இன்டர்நெட்டிலோ - எந்தக் காரணத்திற்காகவும் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.
  • கிரெடிட் கார்டு விவரங்கள், மொபைல் பேங்கிங் PIN மற்றும் User ID-ஐ மொபைலில் சேமிக்காதீர்கள்.
  • PIN அல்லது பாஸ்வேர்டை எங்கும் எழுதி வைக்காதீர்கள்; வங்கியிடமிருந்து வந்த PIN தொடர்பான இமெயில் / கடிதங்களை வைத்திருக்காதீர்கள்.
  • வங்கியின் பெயரில் இமெயில் அல்லது சோஷியல் மீடியாவில் வரும் லின்க்களை கிளிக் செய்யாதீர்கள்.
  • பணம் அனுப்புவதற்கு முன் பெறுநரை சரியாக சரிபார்க்கவும்; ஒருமுறை அனுப்பிய தொகை திரும்பப் பெற முடியாது.
  • பாதுகாப்பற்ற நெட்வொர்க் (பொது இடங்களில் Wi-Fi போன்றவை) மூலம் மொபைல் பேங்கிங் செய்யாதீர்கள்.

 

TMB MBank செக்-சம்

செக்-சம்

பிளாட்ஃபார்ம் arrow_downwardதற்போதைய பதிப்பு arrow_downwardSHA256 செக்-சம் arrow_downward
Android1.0.36Rs.SHA-256 செக்-சம் - 87BA48DE8B9B449F8A1181DC64EB9A9146D1EF84C1601FD74BD076F097A427C8/-
IOS1.9.5SHA 256 செக்-சம் - 984fae152c645af5f84139e0d7927f3ac23aca71d915963fd1ff389677261047

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

ஸ்மார்ட்போன்களில் வங்கி சேவைகளை அணுக வழங்கப்படும் TMB-யின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்.

ஸ்மார்ட்போன்களில் வங்கி சேவைகளை அணுக வழங்கப்படும் TMB-யின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்.
பதிவு செய்த மொபைல் எண்ணுடன் தகுதியான அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மொபைல் பேங்கிங்கை பயன்படுத்தலாம்.

பதிவு செய்த மொபைல் எண்ணுடன் தகுதியான அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மொபைல் பேங்கிங்கை பயன்படுத்தலாம்.
வாடிக்கையாளர்கள் பேலன்ஸ் பார்க்கலாம், ஃபண்ட் டிரான்ஷ்ஃபர் செய்யலாம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சேவைகளை அணுகலாம்.

வாடிக்கையாளர்கள் பேலன்ஸ் பார்க்கலாம், ஃபண்ட் டிரான்ஷ்ஃபர் செய்யலாம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சேவைகளை அணுகலாம்.
ஆப் பாதுகாப்பான லாகின் மற்றும் டிரான்ஷாக்சன் அங்கீகார முறைகளை பயன்படுத்துகிறது.

ஆப் பாதுகாப்பான லாகின் மற்றும் டிரான்ஷாக்சன் அங்கீகார முறைகளை பயன்படுத்துகிறது.
சப்போர்ட் செய்யப்படும் மொபைல் இயங்கு தளங்களில் ஆப் கிடைக்கும்.

சப்போர்ட் செய்யப்படும் மொபைல் இயங்கு தளங்களில் ஆப் கிடைக்கும்.
ஸ்மார்ட்போன்களில் வங்கி சேவைகளை அணுக வழங்கப்படும் TMB-யின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்.

ஸ்மார்ட்போன்களில் வங்கி சேவைகளை அணுக வழங்கப்படும் TMB-யின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்.
பதிவு செய்த மொபைல் எண்ணுடன் தகுதியான அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மொபைல் பேங்கிங்கை பயன்படுத்தலாம்.

பதிவு செய்த மொபைல் எண்ணுடன் தகுதியான அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மொபைல் பேங்கிங்கை பயன்படுத்தலாம்.
வாடிக்கையாளர்கள் பேலன்ஸ் பார்க்கலாம், ஃபண்ட் டிரான்ஷ்ஃபர் செய்யலாம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சேவைகளை அணுகலாம்.

வாடிக்கையாளர்கள் பேலன்ஸ் பார்க்கலாம், ஃபண்ட் டிரான்ஷ்ஃபர் செய்யலாம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சேவைகளை அணுகலாம்.
ஆப் பாதுகாப்பான லாகின் மற்றும் டிரான்ஷாக்சன் அங்கீகார முறைகளை பயன்படுத்துகிறது.

ஆப் பாதுகாப்பான லாகின் மற்றும் டிரான்ஷாக்சன் அங்கீகார முறைகளை பயன்படுத்துகிறது.
சப்போர்ட் செய்யப்படும் மொபைல் இயங்கு தளங்களில் ஆப் கிடைக்கும்.

சப்போர்ட் செய்யப்படும் மொபைல் இயங்கு தளங்களில் ஆப் கிடைக்கும்.