TMB கிஃப்ட் கார்டு
எந்த சந்தர்ப்பத்திலும் எளிமை, வசதி மற்றும் பாதுகாப்பான டிரான்ஷாக்சன்கள் வழங்கும் கவனமான ப்ரீபெய்ட் கிஃப்டிங் தேர்வு
ஒரே முறை லோட் செய்து முழு வசதியோடு பரிசளியுங்கள்
திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் மற்றும் கார்ப்பரேட் பரிசுகளுக்கு ஏற்றது
பாதுகாப்பான மற்றும் தடையற்ற செலவிற்கு EMV சிப் பாதுகாப்பு
POS, ATM மற்றும் ஆன்லைன் மெர்சண்ட்களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது
கண்ணோட்டம்
TMB கிஃப்ட் கார்டு - சிறப்பு தருணங்களை கொண்டாட, தேர்வு செய்யும் சுதந்திரம் வழங்கும் நேர்த்தியான வழி ப்ரீபெய்ட் கார்டு போல் செயல்பட்டு, POS கடைகள், ஆன்லைன் மெர்சண்ட்கள் மற்றும் ATM-களில் முழு வசதியோடு ஷாப்பிங் செய்ய பெறுபவர்களுக்கு வழி செய்கிறது
தயாரிப்பு சிறப்பம்சங்கள்
TMB கிஃப்ட் கார்டு மூலம் ஒரு நிலையான தொகையை லோட் செய்து திருவிழாக்கள், பிறந்தநாள்கள், திருமணங்கள், பணியாளர் பரிசுகள் அல்லது சிறப்பு நிகழ்வுகளுக்கு பல்துறை பரிசாக வழங்கலாம் வழங்க எளிது, கொண்டு செல்ல பாதுகாப்பு, பரவலாக அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படும் தன்மை, இதுதான் இனி சிறந்த பரிசாக இருக்கும்
அம்சங்கள் மற்றும் நன்மைகள்
குறிப்பிட்ட பொருட்களை தேர்ந்தெடுக்காமல் பரிசளிக்கும் வசதியை அனுபவியுங்கள் - பெறுபவர்கள் பெரும்பாலான இடங்களை உள்ளடக்கிய நெட்வொர்க்கில் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஷாப்பிங் செய்யலாம் பாதுகாப்பான டிரான்ஷாக்சன்கள், ரீலோட் தேவையில்லாத எளிய வடிவம், பாதுகாப்பான டிஜிட்டல் பயன்பாடு, செலவு கண்காணிப்பு வசதி - ஒரே கார்டில் அனைத்தும் கிடைக்கும்
தகுதி
Tதனிப்பட்ட பரிசு வழங்குதல், கொண்டாட்டங்கள், விளம்பர நிகழ்வுகள் மற்றும் பணியாளர் விருதுகளுக்காக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தனிநபர் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்கள் TMB கிஃப்ட் கார்டை பெறலாம்
அம்சங்கள், கட்டணங்கள் மற்றும் தினசரி வரம்புகள்
பரிசு அளிப்பதற்கும், வெகுமதிகளுக்கும் மற்றும் வணிகர்களிடம் பாதுகாப்பான முறையில் பணம் செலுத்துவதற்கும் ஏற்ற, மீண்டும் பணம் ஏற்ற முடியாத (non-reloadable) அட்டை
முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்
| அளவுரு | விவரங்கள் |
|---|---|
| கார்டு வகை | ரீலோடு செய்ய முடியாத கிஃப்ட் கார்டு |
| வழங்கப்படும் குறைந்தபட்ச தொகை | ₹500 |
| வழங்கப்படும் அதிகபட்ச தொகை | ₹10,000 |
| கார்டு ஜாயினிங் கட்டணம் | அக்கவுண்ட் ஹோல்டர்கள்: இலவசம் | அக்கவுண்ட் இல்லாதவர்கள்: ₹5,000 வரை இலவசம்; ₹5,000-க்கு மேல் – ₹50 + பொருந்தக்கூடிய வரிகள் |
| கார்டு செல்லுபடியாகும் காலம் | 3 ஆண்டுகள் |
| வருடாந்திர கட்டணம் | இல்லை |
| கார்டு ரீபிளேஸ்மெண்ட் கட்டணம் | ₹100 + GST |
| பயன்பாடு | மெர்ச்சண்ட் நிறுவனங்களில் POS மற்றும் இ-காமர்ஸ் டிரான்சஷாக்சன்களுக்கு மட்டும் |
| ATM கேஷ் வித்டிராயல் | அனுமதிக்கப்படவில்லை |
| மெர்ச்சண்ட் டிரான்சஷாக்சன்கள் கட்டணங்கள் | RuPay வசதி கொண்ட மெர்ச்சண்ட்களுக்கு கட்டணங்கள் இல்லை; பெட்ரோல் பங்க், ரயில்வே போன்ற குறிப்பிட்ட வகைகளுக்கு கூடுதல் கட்டணம் பொருந்தும். |
| மற்ற வங்கி ATM-களில் டிரான்சஷாக்சன்கள் | கேஷ் வித்டிராயல்: ஒவ்வொரு டிரான்சஷாக்சனுக்கும் ₹21 | நிதிசாரா டிரான்சஷாக்சன்: ₹6 | கார்டு-டு-கார்டு டிரான்ஷ்ஃபர்: ₹10 |
| காலாவதிக்கு பின் – பேலன்ஸ் தொகை மாற்றம் | தேவையான KYC ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம், கார்டு காலாவதியான 90 நாட்களுக்குள் வாங்கப்படும் புதிய கிஃப்ட் கார்டிற்கு மீதமுள்ள பேலன்ஸை டிரான்ஷ்ஃபர் செய்து கொள்ளலாம். |
| மீண்டும் வழங்கப்படும் போது KYC தேவை | ஏற்கனவே KYC விதிமுறைகளை பூர்த்தி செய்த வங்கி வாடிக்கையாளர்கள் மீண்டும் KYC சமர்ப்பிக்க வேண்டியதில்லை. |
| பேலன்ஸ் இழப்பு விதிமுறை | கார்டு காலாவதியான 90 நாட்களுக்குள் மீண்டும் வழங்குவதற்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்படாவிட்டால் பேலன்ஸ் தொகை இழக்கப்படும். |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்