TMB Mastercard டெபிட் கார்டுகள்
தினசரி வாழ்க்கைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட எங்கள் கார்டுகள், பாதுகாப்பு, நெகிழ்வு மற்றும் பரவலான ஏற்றுக்கொள்ளுதலை ஒருங்கிணைத்து, உங்கள் வாழ்க்கை முறையை மேலும் சுலபமாகவும் நம்பிக்கையுடனும் முன்னேற்றுகின்றன.

அன்றாட வணிக தேவைகளுக்கு பாதுகாப்பான கார்டு பேமெண்ட்
பாதுகாப்பான டிரான்ஷாக்சன்களுக்கு சிப் மற்றும் PIN பாதுகாப்பு
ATM வித்டிராயல்ஸ் மற்றும் மெர்சண்ட் பேமெண்ட், உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் வசதி.
வசதியான சேவை மற்றும் செலவு கண்காணிப்பு
கண்ணோட்டம்
TMB Master MSME கோல்ட் கார்டு - பர்சேஸ், பயண செலவுகள், யுட்டிலிட்டி (பில்) பேமெண்ட், வித்டிராயல்ஸ் என வணிக தேவைகளுக்கு MSME உரிமையாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் பாதுகாப்பான பேமெண்ட் செய்ய உதவுகிறது
தயாரிப்பு சிறப்பம்சங்கள்
உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் வசதி, EMV சிப் பாதுகாப்பு, மற்றும் ஒவ்வொரு டிரான்ஷாக்சனுக்கும் வெளிப்படையான SMS அலர்ட் - வணிக நிறுவனங்களுக்கான இயல்பான பலன்கள் முன்வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட செலவினங்களை அனுமதிப்பதன் மூலம் தினசரி நிதி செயல்பாடுகளை எளிதாக்கி, தெளிவான செலவு கட்டுப்பாட்டை பராமரிக்க உதவுகிறது
அம்சங்கள் மற்றும் நன்மைகள்
பாதுகாப்பான சிப் மற்றும் PIN அங்கீகாரம், ஆன்லைன் மற்றும் POS பேமெண்ட் வசதி, ATM அணுகல், மற்றும் விரும்பினால் மட்டும் செயல்படுத்தக் கூடிய கான்டாக்ட்லெஸ் வசதி - அனைத்தும் ஒரே கார்டில் நிகழ் நேரத்தில் செலவு விவரங்களை அறிய முடிவதால் MSME நிறுவனங்கள் தெளிவான நிதி நிர்வாகத்தை அடைகின்றன
தகுதி
TMB-ல் தகுதியான அக்கவுண்ட் வைத்திருக்கும் MSME நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் வணிக ஆவணங்களின்படி தனியுரிமையாளர்கள், பார்ட்னர்கள், இயக்குனர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரர்களுக்கு கார்டு வழங்கலாம்
அம்சங்கள், கட்டணங்கள் மற்றும் தினசரி வரம்புகள்
MSME வணிகங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரீமியம் டெபிட் கார்டு
முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்
| அளவுரு | விவரங்கள் |
|---|---|
| தகுதி | தகுதியான வாடிக்கையாளர் வகை: தனிநபர் வணிக நிறுவனத்தின் உரிமையாளர், கூட்டாண்மை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை (LLP) மற்றும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் ஆகியவை தகுதியுடையவை; CASME திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட நடப்புக் கணக்குகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். |
| MSME-க்கான பிரத்யேக அட்டை | MSME வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது |
| தனிப்பயனாக்கப்பட்ட டெபிட் கார்டு | வணிகப் பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது |
| அதிக பரிவர்த்தனை வரம்புகள் | அதிக மதிப்புள்ள வணிகக் கட்டணங்களை ஆதரிக்கிறது. |
| சர்வதேசப் பயன்பாடு | Mastercard வசதி கொண்ட விற்பனை நிலையங்களில் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. |
| டிஜிட்டல் பணம் செலுத்துதலுக்குத் தயார் | POS, மின்-வணிகம், IMPS மற்றும் அட்டை இல்லா பரிவர்த்தனைகளை ஆதரிக்கிறது. |
கட்டணங்கள் மற்றும் செலவுகள்
| கட்டண வகை | பொருந்தக்கூடிய கட்டணம் |
|---|---|
| அட்டை வெளியீட்டுக் கட்டணம் | ஏதுமில்லை |
| ஆண்டுக்கட்டணம் | ஏதுமில்லை |
| மீண்டும் வழங்குதல் / மாற்றுவதற்கான கட்டணம் | ஏதுமில்லை |
| PIN-ஐ மீண்டும் உருவாக்குவதற்கான கட்டணம் | ஏதுமில்லை |
பயன்பாட்டு வரம்புகள் மற்றும் நிபந்தனைகள்
| பயன்பாட்டு வகை | அதிகபட்ச வரம்பு (₹) |
|---|---|
| பணம் எடுப்பதற்கான வரம்பு | ₹50,000 |
| POS (விற்பனை முனைய) வரம்பு | ₹5,00,000 |
| மின்னணு வர்த்தக (இணையவழிப் பரிவர்த்தனை) வரம்பு | ₹5,00,000 |
| சர்வதேசப் பயன்பாடு | செயல்படுத்தப்பட்டது |
பரிவர்த்தனை வரம்புகள் மற்றும் எண்ணிக்கை
| பரிவர்த்தனை வகை | பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை | அதிகபட்சத் தொகை (₹) |
|---|---|---|
| பணம் எடுத்தல் | 5 | ₹50,000 |
| சுய மாற்றம் | வரம்பு இல்லை | ₹1,00,000 |
| மூன்றாம் தரப்புப் பரிமாற்றம் | வரம்பு இல்லை | ₹1,00,000 |
| அட்டைக்கு அட்டை பணப் பரிமாற்றம் | 5 | ₹25,000 |
| அட்டை இல்லா பணம் எடுத்தல் (பணம் அனுப்புபவர்) | வரம்பு இல்லை | ₹50,000 |
| IMPS பரிமாற்றம் | வரம்பு இல்லை | ₹50,000 |
| POS பரிவர்த்தனைகள் | வரம்பு இல்லை | ₹5,00,000 |
| மின்னணு வணிகப் பரிவர்த்தனைகள் | வரம்பு இல்லை | ₹5,00,000 |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்